வெள்ளி, 7 மே, 2010

யுத்தம் பழகு


காலாட்படை
புரவிப்படை
யானைப்படை
தரை வழித்
தாக்குதல்
வான் வழித்
தாக்குதல்
நீர் வழித்
தாக்குதல்
யுத்தக்
கலைகளின்
அறிமுகமுண்டு.
இதென்ன
புதிதாய்..
ஓர விழிப்
பார்வையாலும்
உதட்டுச்
சுழிப்பாலும்
விரல் நுனித்
தீண்டலாலும்
ஓர்
இனிய யுத்தம்.

8 கருத்துகள்:

ஹேமா சொன்னது…

வாழ்வை விழிப்படைய வைக்கும் அது விழிப்படையோ !

padma சொன்னது…

இந்த யுத்தம்தான் தோற்றாலும் இனிக்கும் யுத்தம் .நல்லா சண்டை போடுங்கோ

சுந்தர்ஜி சொன்னது…

எல்லாப் படைக்கும் மருந்துண்டு.விழிப்படைக்கு விழிப்படைதல்தான் மருந்து.

padma சொன்னது…

சுந்தர்ஜி சூப்பர் வார்த்தை விளையாட்டு

அண்ணாமலை..!! சொன்னது…

அது சரி! இது புதுவிதமான யுத்தம்தான்!!
அன்னையர் தின நல்வாழ்த்துகள்!

சுந்தர்ஜி சொன்னது…

நன்றி பத்மா மதுமிதா வழியாக.

அனுஜன்யா சொன்னது…

ம்ம், நடக்கட்டும் :)

அனுஜன்யா

ரிஷபன் சொன்னது…

சபாஷ்! கவிதை ஜெயித்து விட்ட யுத்தம்..