வியாழன், 6 மே, 2010

ஒரு கையசைப்பு

சின்னஞ்சிறு
ரயில் நிலையங்களை
நீங்கள்
தடதடத்துக்
கடக்கும் போது
உங்களின்
பிரியமானக்
கையசைப்பை
விட்டு
வாருங்கள்
மஞ்சள் சரக்கொன்றை
மரத்தடி பெஞ்சில்
வந்தமரப் போகும்
உறவுகளால்
விலக்கப்பட்ட
ஒரு முதியவருக்கு.

7 கருத்துகள்:

ஹேமா சொன்னது…

எனக்கு இருக்கு இந்தப் பழக்கம்.யாரையோ கண்டு பிரிவதுபோல ஒரு நெகிழ்வு !

பத்மா சொன்னது…

நைஸ் நைஸ்

இனியாள் சொன்னது…

அருமையான கவிதை மதுமிதா, மனதிற்கு நெருக்கமானதாய் இருக்கிறது.மஞ்சள் சரகொன்றையை எத்தனை பேர் எழுதுகிறார்கள்.

சுந்தர்ஜி சொன்னது…

அன்பால் மலர்கிறது ஒரு மலர் உங்கள் கவிதையாய்.எந்த ரயில் க்ராஸிங்குகளிலும் நிற்கும் பசங்களுக்குக் கையசைக்கும் வழக்கம் இன்னும் தொடர்கிறது.

anujanya சொன்னது…

எளிதில் மனங்கவரும் வரிகள்.

அனுஜன்யா

ரிஷபன் சொன்னது…

நெட் கிடைக்காத நேரங்களில் சில நேரம் தவறி விடுகிறது வாசிப்பு.. அதுவே வரமாகவும் ஆகிவிடுகிறது இப்படி சேர்த்து வைத்து வாசிக்கும்போது.. அற்புதம் மதுமிதா.. தொகுப்புக்கு விஷயம் தயார்..இப்போது உங்களுக்கு!