திங்கள், 10 மே, 2010

இன்னமும் தீரவில்லை


சூரியன்
உட்புகா
வனத்தின்
அடர் இருளில்
சருகுகளின்
முணுமுணுப்பில்
தூரத்து
நீர்வீழ்ச்சியின்
சப்தத்தை
நோக்கி
நகரும்
திசை
இழந்தவனின்
விரல் பற்றி
ஒற்றைத்
தீபமாய்
அழைத்துச்
செல்வது
அவனது
எஞ்சியுள்ள
வாழ்வின்
மீதானத்
தீராக்காதலோ?

2 கருத்துகள்:

ஹேமா சொன்னது…

உண்மைதான் மது.
காதல்...வாழ்வோடும் காதல் வேணும்.இல்லாவிட்டால் வெறுமைதான் இறப்புவரை !

ரிஷபன் சொன்னது…

வாழ்வின் மீதான காதல் ஜெயிக்கட்டும்..