திங்கள், 10 மே, 2010

பூக்களைக் கேட்டுப் பார்


பூக்கள்
அழகானவை.
ஆம்.
பூக்கள்
மிருதுவானவை.
ஆம்.
பூக்கள்
வாசமானவை.
ஆம்.
எனில்
அவற்றைச்
செடிகளிலேயே
விட்டு விடுங்கள்.
ஒரு நாள்
வாழ்வெனினும்
அவைகள்
வாழ்ந்துத்
தீர்க்கட்டுமே.

3 கருத்துகள்:

ஹேமா சொன்னது…

ஒரு நாள் வாழ்ந்தாலும் எல்லோராலும் விருப்பப்பட்டு பூஜிக்கப்பட்டு வாழும் வாழ்வு பூவுக்கு !

padma சொன்னது…

ஆம் எனக்கும் பூவை பறித்தால் பிடிக்காது

ரிஷபன் சொன்னது…

எனக்கும் பூவைப் பறித்தால் பிடிக்காது.. அட.. எப்படி ஒரு ஒத்த ரசனை..