புதன், 12 மே, 2010

கடவுளைத் தேடி வந்தவள்


பறக்கும்
தட்டிலிருந்து
வந்திறங்கியவள்
ஜாடையில்
பெண்ணைப்
போலிருந்தாள்.
விசாரித்ததில்
தெரிந்தது.
அவள்
கடவுளைத்
தேடி வந்ததாக.
இங்கே
தனியாகக்
கடவுள்
என்று
எவருமிலர்.
என் பதில்
கேட்டு
வியந்தவளிடம்
சொன்னேன்.
ஏனெனில்
இங்கே
சாத்தான்களும்
இல்லை.
நம்பிக்கை
இல்லாமல் தான்
புறப்பட்டுச்
சென்றாள்
அந்த
பூமிப் பெண்.

5 கருத்துகள்:

padma சொன்னது…

அவங்கள ஏன் போக விட்டீங்க ?ஒருவேளை அவங்க கடவுளா கூட இருந்திருக்கலாம்

ஹேமா சொன்னது…

ஓ....சாத்தான்கள் இருக்குமிடம்தான் கடவுள் இருக்குமிடமோ !

கவிதை தரும் நீங்கள்கூடக் கடவுள்தானே !

சுந்தர்ஜி சொன்னது…

நான் ஊரில் இல்லாத போது நடந்திருக்கிறது எல்லாக் கூத்தும்.

வேடிக்கை தாண்டி அருமை மதுமிதா.

ரிஷபன் சொன்னது…

அவளுக்கும் நம்பிக்கை இல்லியா?!

சுசி சொன்னது…

வித்தியாசமான சிந்தனை..