திங்கள், 10 மே, 2010

நினைவுக் குறிப்புகள்


திண்ணையில்
முடக்கப்பட்ட
முதியவளின்
சமையலறை
ஞாபகங்களின்
மிச்சங்களும்
மணலில்
புதைந்து
உடைந்த
ஒற்றைப்
படகின்
கடற்பயணங்களின்
ஈரவரிகளும்
காத்திருக்கின்றன
ஒரு
தொல்பொருள்
வல்லுநரின்
எழுதுகோலுக்காய்.

6 கருத்துகள்:

padma சொன்னது…

அருமை .நேயத்தோடு அணுக வேண்டும் இல்லையா

தமிழ்குறிஞ்சி சொன்னது…

தங்களது கவிதையை எமது தமிழ் குறிஞ்சி இணைய இதழில்கவிதைகள் பகுதியில் வெளியிட்டுள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

அன்புடன்,
ஆசிரியர்,
தமிழ்குறிஞ்சி

சந்ரு சொன்னது…

இரசித்தேன்

ரிஷபன் சொன்னது…

அட! ஒண்ணாங்கிளாஸானு..!

உதய தாரகை சொன்னது…

இங்கே தொல்பொருள் வல்லுனரின் பார்வைக்கு கவித்துவம் கிடைத்திருக்கிறது. அழகிய ஈரவரிகள் கொஞ்சித் தரும் அனுபவத்தை தொல்பொருள் அறிஞனால் சொல்ல முடிவதில்லை. கலைஞனுக்கு மட்டுமே அது முடியும்.

நன்றாக இருந்தது. சொற்களின் கனதியை வரிகள் சொல்லியது.

இனிய புன்னகையுடன்,
உதய தாரகை

ஹேமா சொன்னது…

மது ...எவ்வளவு தூரமாய் சிந்திக்கிறீர்கள் ஒவ்வொரு கவிதையையும்.அருமை அருமை.