ஞாயிறு, 16 மே, 2010

பிடிமானம்


ஆசையைத் துற.
புத்தனின்
கோட்பாட்டை
வழுக்குப் பாறையில்
ஏறிக்கொண்டிருக்கும்
என்னிடம்
போதிக்காதே.
விழுந்தால்
சாஸ்திரத்துக்குக்
கூட
ஓர் எலும்பு
மிஞ்சாது.
ஏறிக்
கொண்டிருக்கிறேன்
உயிர்
மீதான
ஆசையை
இறுகப்
பற்றிக் கொண்டு.

5 கருத்துகள்:

ஹேமா சொன்னது…

வழுக்குப்பாறையானாலும் தான் தொடும் உச்சிகூட ஏறுபவது ஆசையாய் இருக்கலாமே !

Madumitha சொன்னது…

இருக்கலாம்.

padma சொன்னது…

அங்க வந்து யார் போதிக்கறது ? நிச்சயம் அது புத்தராய் தான் இருக்கணும் .:)
உண்மையான வார்த்தைகள் மது .நல்லா இருக்கு

Madumitha சொன்னது…

நன்றி பத்மா.

ரிஷபன் சொன்னது…

யெஸ்.. முயற்சிக்காம எப்படி இருக்கறது..