வெள்ளி, 7 மே, 2010

வைரமாய் ஒரு வார்த்தை


வடிந்து
கொண்டிருக்கும்
இரவு
வற்றுவதற்குள்
அந்த
வார்த்தையைக்
கண்டடைய
வேண்டும்.
உருண்டு
உருண்டு
மொண்ணையாகிப்
போன
கூழாங்கற்களின்
குவியலுக்கிடையே
வைரமாய்
ஜ்வலிக்க வேண்டும்
அந்த வார்த்தை.
முதல்
வார்த்தையால்
தானே
கவிதை
தன்
சாளரத்தைத்
திறந்து வைக்கிறது?

5 கருத்துகள்:

ஹேமா சொன்னது…

ம்ம்ம்...அந்த வார்த்தை கிடைத்தால் போதும்.அதைப் பிடித்துக்கொண்டே ஏறிடலாம் கவிதையாய்.
அப்படித்தான் உங்கள் கவிதைகளும்.

padma சொன்னது…

கண்டுபிடிச்சுடீங்களா?

சுந்தர்ஜி சொன்னது…

ஹா.பொங்குகிறேன்.கவிதை கவிதை மதுமிதா.

அனுஜன்யா சொன்னது…

உண்மைதான். நிறைய சமயங்களில் எளிதில் வசப்படாமல் இருப்பதில் தான் அதன் வசீகரமும்.

அனுஜன்யா

ரிஷபன் சொன்னது…

அப்படியே சத்தியமான வார்த்தை..