திங்கள், 24 மே, 2010

மறதி


எதிர்
ஜன்னலில்
விரையும்
முகங்களைப்
போல்
ஞாபக
விளிம்பிலிருந்து
நழுவுகின்றன
நேற்றைய
கனவில்
கேட்ட
இசையின்
வடிவங்கள்.

4 கருத்துகள்:

ஹேமா சொன்னது…

கேட்டு மறந்த இசையாய்
இசை இருப்பதில்லை.
என்றோ கேட்ட இசை கூட
முழுதாக இல்லாவிட்டாலும்,
ஒரு கனவுபோல அலைபோல மனதில் நிற்கும்.

padma சொன்னது…

ஜன்னலில் மறையும் முகங்கள் ...
இதுவே அழகான கவிதை

சுந்தர்ஜி சொன்னது…

கனவுகளை என்ன செய்யலாம் மது?

K.B.JANARTHANAN சொன்னது…

ஆமாம் வேகமாக! ARUMAI!