புதன், 19 மே, 2010

உனக்கும் அமிழ்தென்று பெயரா ?


நீ
உன் பெயரை
சொல்லியிருக்கலாம்.
அதன்
காலடித்தடம்
என் மனசுக்குள்
பதியாமல் கூட
போயிருக்கலாம்.
சொல்லாததால்
ஆங்கில
திரைப்படத்தின்
இறுதியில்
திரையில்
ஓடும்
பெயர்களைப் போல்
ஓடுகின்றன
மனசுக்குள்
உனை
அழைப்பதற்கான
பெயர்கள்.

6 கருத்துகள்:

ஹேமா சொன்னது…

//ஆங்கில
திரைப்படத்தின்
இறுதியில்
திரையில்
ஓடும்
பெயர்களைப் போல்//

புதுசாயிருக்கு உவமை !மது அசத்துறீங்க.

Madumitha சொன்னது…

உங்களின் பின்னூட்டங்கள்
உற்சாகப் படுத்துகின்றன
ஹேமா.

padma சொன்னது…

எதாவது ஒண்ணு பொருந்தி போன செமையா இருக்கும்ல

சுந்தர்ஜி சொன்னது…

நல்ல உவமையுடன் நல்ல கவிதை.

vasan சொன்னது…

க‌விதை 'ம‌து'வில் 'மித'க்கிரறேன்

யாதவன் சொன்னது…

கவிதை அருமை