ஞாயிறு, 30 மே, 2010

மற்றுமொரு செய்தி


குழல்
பறக்க
மின்மினிகளை
துரத்திக் கொண்டு
ஓடுபவளின்
உள்ளங்கை
வெதுவெதுப்பில்
பதுங்கிகொள்ள
நட்சத்திரங்கள்
விருப்பம்
தெரிவித்திருப்பதாய்
செய்தியொன்று
வந்தது
நேற்றைய
கனவில்.

1 கருத்து:

ஹேமா சொன்னது…

ஓ...வானத்தைவிட வஞ்சியின் கைகளுக்குள் பாதுகாப்பு அதிகமோ !