சனி, 8 மே, 2010

பொருள் வயிற் பிரிவுகுளிரூட்டி
குளிர்சாதனப்பெட்டி
தொலைக்காட்சிப்பெட்டி
சலவை இயந்திரம்
அலைபேசி
மடிக்கணினி
நான்குசக்கர வாகனம்
இரண்டுசக்கர வாகனம்
நான்கு வங்கியின்
பண அட்டை
பொருள்களால்
நிரம்பி
வழிகிறதென்
பிரம்மாண்ட வீடு.
என் பிரியத்திற்குரியப்
பெண்ணின்
விழியோரங்களிலிருந்து
உருளும்
கண்ணீர்த் துளிகளை
விரல் நீட்டித்
துடைக்க
முடியவில்லை
காமிரா
வழியாக.

9 கருத்துகள்:

padma சொன்னது…

முகத்தில் அடிக்கும் உண்மை . செல்வம் எதற்காக ?
உரியவர்கள் பக்கம் இல்லாத போது?

செல்வராஜ் ஜெகதீசன் சொன்னது…

நல்லா இருக்குங்க.

அண்ணாமலை..!! சொன்னது…

ஆகா... என்ன வரிகள்!
எல்லாமே முற்றமுழுக்க தமிழில்!
பாசத்தின் வெளிப்பாடு!

ஹேமா சொன்னது…

கவிதை அழகான சொற்கோர்வை.
அவன் தூரதேசம் போனபடியால்தால் வீடு நிறைய நாகரீகப் பொருட்கள் குவிந்தன.கமெரா உட்பட !

(கமெரா - புகைப்படக் கருவி)இங்கு நீங்கள் web cam மைத்தான் குறிப்பிட்டிகிறீர்கள் மது.
அதன் தமிழ்ப் பெயர் என்ன ?

பெயரில்லா சொன்னது…

அன்பை சொல்லும் அழகிய கவிதை அத்தனை இருந்தும் கண்ணீர் துடைக்கும் கரம் அருகில்லாத குறை...வலி தான் இந்த வாழ்க்கை

சுந்தர்ஜி சொன்னது…

கண்ணீரைத் துடைக்க முடியாத தொலைவு எப்பொழுதுமே தாங்கமுடியாததுதான்.உங்கள் கவிதை கைகளில் ஏந்தட்டும் உருளும் துளிகளை.

அப்பாவி தங்கமணி சொன்னது…

ரெம்ப கவிதையா குறைந்த வரிகள்ல அழகா பிரிவின் துயரத்த சொல்லி இருக்கீங்க மது. Marvellous .... ரெம்ப நல்லா இருக்கு

அனுஜன்யா சொன்னது…

நல்லா இருக்கு பாஸ். நிறைய வாசித்து, நிறையவும் எழுதுங்கள்.

அனுஜன்யா

ரிஷபன் சொன்னது…

உருளும்
கண்ணீர்த் துளிகளை
விரல் நீட்டித்
துடைக்க
முடியவில்லை
காமிரா
வழியாக.
ஆஹா.. மனசை என்னவோ செய்தது..