புதன், 12 மே, 2010

ஒரு கத்துக்குட்டியின் சமையல் குறிப்பு


முதலில்
அடுப்பைப்
பற்றவைக்கவும்.
கைப்பிடி
நீளமானக்
கடாயை
அடுப்பில்
ஏற்றவும்.
மிகச் சரியாக
250 மி.கி.
மார்க்ஸிஸம்
எடுத்து
கடாயில்
கொட்டி
பொன் நிறம்
வரும் வரை
வறுக்கவும்.
வறுக்கும் போதே
இரண்டு சிட்டிகை
தலித்தியம்
சேர்க்கவும்.
நிறைய
நீர்
விட்டுக்
கலக்கவும்.
உடன்
பெண்ணியத்தை
மிக்ஸியில்
அடித்து
இரண்டு
விழுது
சேர்க்கவும்.
நாலைந்து
பின்
நவீனத்துவத்தை
நீளமாகக்
கீறிப்
போடவும்.
திரவ
நிலையிலிருந்து
திட
நிலைக்கு
மாறும்
புள்ளியில்
மத ஒற்றுமையை
மூன்று
தேக்கரண்டி
விட்டு
லேசாகக்
கிளறவும்.
சுவையானக்
கவிதை
தயார்.

7 கருத்துகள்:

ஹேமா சொன்னது…

நான் ஒண்ணுமே சொல்ல மாட்டேன் மது.கவிதைக்குக் கரு எங்கயெல்லாம் கிடைக்குது உங்களுக்கு.
அடுப்பு - சமையல் !

Madumitha சொன்னது…

நிச்சயமாக ஹேமா.
நன்றி.

ரிஷபன் சொன்னது…

ஹா.. ஹா.. அசத்திட்டீங்க.. சான்ஸே இல்ல.. தப்பா நினைக்கலன்னா ‘கையைக் கொடுடா ராஸ்கல்’னு சொல்லத் தோணுது.. (ஸாரி)

Madumitha சொன்னது…

உங்களுக்கு இல்லாத
உரிமையா?
நன்றி ரிஷபன்.

சுந்தர்ஜி சொன்னது…

அடுப்புப் பத்த வச்சு பாந்தமா ஆணி அடிச்சுட்டீங்க மது அற்புதமா.

ஹுஸைனம்மா சொன்னது…

ஓ, இப்படித்தான் கவிதை “வடிக்கணுமா”?? ;-))

உறரணி சொன்னது…

அன்புள்ள மதுமிதா,,,

என் பையனின் உதவியால் இந்த கருத்துரை பெட்டியைக் கண்டுபிடித்தேன். கவிதைப் பக்கங்களில் ஒவ்வொரு கவிதையும் வெகு சுவையானவை. சுவாரஸ்யம் மிக்கவை. எதார்த்தமானவை. கசிய வைப்பவை. மனம் துள்ளுகிறது நிறைய எழுத. இன்னும் எழுது. எழுதுகிறேன். உறரணி.