புதன், 19 மே, 2010

வளர்ப்பு


சங்கிலியில்
பிணைத்து
ஆட்களை
இழுத்துக்கொண்டு
ஓடும்
உயர் ஜாதி நாய்களை
வளர்த்ததில்லை.
அடுப்பில்
கொதிக்கும்
மீன் வாசத்துக்காய்
கால்களை
சுற்றிவரும்
பூனைகளை
வளர்த்ததில்லை.
சமுத்திரக்
கனவுகளுடன்
கண்ணாடித் தொட்டியில்
நீந்திக்கொண்டிருக்கும்
தங்க மீன்களை
வளர்த்ததில்லை.
ஆகாயம் நோக்கி
வீசியெறிந்தும்
வட்டமிட்டு
கீழிறிங்கி
தோளில் அமரும்
புறாக்களை
வளர்த்ததில்லை.
இழந்த ஆகாயத்தை
கூண்டுக்குள் தேடி
பரிதவிக்கும்
காதற்கிளிகளை
வளர்த்ததில்லை.
எனினும்
வளர்கிறது
ஒரு மிருகம்
மனசுக்குள்.

6 கருத்துகள்:

ஹேமா சொன்னது…

பிறக்கும்போதே கூடப் பிறக்குதே அது.
அப்போ அது வளரவேண்டாமோ !

Madumitha சொன்னது…

பிறக்கும் போதேவா?
இது ரொம்ப ஜாஸ்திங்க.

பத்மா சொன்னது…

இருக்குன்னு தெரிஞ்சாலே அது விசேஷம்

சுந்தர்ஜி சொன்னது…

கடவுள் பாதி மிருகம் பாதிதான்.

vasan சொன்னது…

தொட்டியில் நீந்தும் த‌ங்க‌மீன்க‌ளின் ச‌முத்திர‌க் க‌ன‌வுக‌ளையும்,
கூண்டுக்குள் ஆகாயம் தேடும் காதற்கிளிக‌ளின் த‌விப்பும்
அறிந்த‌வ‌ர் ம‌ன‌தில், எப்ப‌டி மிருக‌ம் வள‌ர்க்க‌ முடியும்?
ஆம்மெனில்.................
அணில்க‌ளும், முய‌ல்க‌ளும் மிருக‌த்தில் சேருமோ?

Madumitha சொன்னது…

நன்றி பத்மா. விசேஷம் தான். விரட்டற
வழிதான் தெரியல.
நன்றி சுந்தர்ஜி. இதுக்கும் ஒண்ணூ இருக்குல்ல.
நன்றி வாசன்(தானே). உங்க
கருத்து நல்லாருக்கு.