செவ்வாய், 4 மே, 2010
60X40
பிளாட் வாங்கலியோ பிளாட்.
கூவிக் கூவி அழைப்பது என் காதிலும்
விழத்தான் செய்கிறது.
ஆனா வாங்கத்தான் மனசில்லை.
எனக்கு பிபி இருக்கு.
எனக்கு கொலஸ்ட்ரால் இருக்கு.
எனக்கு சுகர் இருக்கு.
என்பது போல ஊருக்கு வெளியே எனக்கு
ரெண்டு பிளாட் இருக்கு.
என்று சொல்லாத ஆட்களை
இப்போது விரல் விடாமலே
எண்ணிவிடலாம்.
அதில் அடியேனையும் சேர்க்க.
மேலே சொல்லப்பட்ட ஊருக்கு வெளியே
என்பது ஒரு Under statement.
அடுத்த ஊருக்கு அருகே எனப் பொருள்
கொள்க.
நெருங்கி காதோடு காதாக விசாரித்தால்
யார்யா அங்கே வீடு கட்டுவார்கள்?
எல்லாம் இன்வெஸ்ட்மெண்ட்டுக்குத்தான்.
Warren Buffet போல் மந்தகாசத்துடன்
சொல்கிறார்கள்.
பொண்ணு படிப்பா...
பையன் கல்யாணமா..
ஒரு பிளாட்டை வித்தாப் போதும்.
அது சரி. இப்படியேப் போனா
அதை யார் வாங்குவா?
அமெரிக்காவில் இதானே நடந்தது.
அமெரிக்கப் புலி சூடு
பட்டதுக்கு எல்லா நாட்டுப்
பூனைக்குட்டிகளும்
மியாவ்..மியாவ்.. ன்னு
கத்தினது காதில் இன்னும்
கேட்டுட்டுதானிருக்கு.
நம் மனசை 60 க்கு 40
என்று சுருக்கிக் கொள்ளாமல்
ஆகாயம் அளவுக்கு
விரிவாக்குவோம்.
விளைநிலங்களை
பாதுகாப்போம்.
விவசாயிகளை விவசாயிகளாய்
இருக்க விடுவோம்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
4 கருத்துகள்:
//அமெரிக்கப் புலி சூடு
பட்டதுக்கு எல்லா நாட்டுப்
பூனைக்குட்டிகளும்
மியாவ்..மியாவ்.. ன்னு
கத்தினது காதில் இன்னும்
கேட்டுட்டுதானிருக்கு.//
மது சொன்ன விதம் சிரிக்க வச்சிட்டுது.சொன்ன விஷயம் சரி.இயற்கையைப் பாதுகாப்போம்.காடுகள் அழிந்து கட்டிடக் காடுகளாகிவிட்டன.
வாங்கலாமா வேணாமா?
கரெக்ட் மது.
பத்மா-நீங்க வாங்குங்க.ஆனா விக்காதீங்க.ஹேமா பாட்டு சிரிக்கட்டும்.கண்டுக்காதீங்க.
நன்றி
ஹேமா.
பத்மா.
சுந்தர்ஜி.
கருத்துரையிடுக