செவ்வாய், 4 மே, 2010

வளர்க இந்தியா



இன்வெஸ்ட்மெண்ட் குரு என்றழைக்கப் படும் Mr.Warren Buffett
அடுத்த வருடம் இந்தியாவில் முதலீடு செய்ய உள்ளதாகக்
கூறியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 10 வருடங்களில்
இந்தியா பொருளாதாரத்தில் மிக வலுவான நிலையை அடைந்துள்ளதாகவும்
கூறியுள்ளார்.
வசிஷ்டர் வாயால் பிரும்ம ரிஷி பட்டம்.
தனிமனித வழிபாடு எனத் தப்பாகப் புரிந்து கொள்ள வேண்டாம்.
நம் அரசியல்வாதிகளின் பேச்சைக் கேட்டுத் தூர்ந்து போன நம்
காதுகளுக்கு ஒரு வெளிநாட்டுக்காரரின் குரல் இனிதுதான்.
ஆம்.
திரு.வாரென் ஓர் அமெரிக்கர்.
கம்யூனிஸ்ட்கள் மன்னிக்க.
Berkshire Hathway ன் Chairman மற்றும் CEO.
உபரியாய் ஒரு செய்தி.
coco cola ஷேரின் ஒரு பகுதியை வைத்திருக்கிறார்.
Buffett முதலீடு செய்கிறார் எனக் கேள்விப்பட்டாலே
வெளி முதலீடு வெள்ளமெனப் பெருகும்.



சுவாரசியமான செய்தி ஒன்று உண்டு.
Superstar என Buffett ஆல் அழைக்கப் படுபவர் திரு.அஜித் ஜெயின்.
பெயரைக் கேட்டாலே ச்சும்மா அதிருதுல்ல...
ஆம்.
அஜித் ஜெயின் ஓர் இந்தியர்.
Warren Buffett ன் வாரிசாக நியமிக்கப் படப் போகிறவர்.
Ajith பற்றி Buffett என்ன சொல்கிறார் கேளுங்களேன் :

If Charlie(Bufett's partner),I and Ajith are ever in a
sinking boat- and you can only save one of us- swim to
Ajith(Jain).

Hats Off Ajith.



Warren Buffett பற்றிக் கடைசியாய் ஒரு செய்தி :

தன்னுடைய சொத்தில் 85 சதத்தை BILL GATES இன் Foundation க்குக்
கொடுத்தார்.. கொடுத்துக்கொண்டிருக்கிறார்..
கொடுக்கப் போகிறார்.
செல்வம் என்பது அடைந்ததில் அல்ல
வழங்குவதில் தான் உள்ளது.

4 கருத்துகள்:

சுந்தர்ஜி சொன்னது…

வாரென் பஃபெட்,பில் கேட்ஸ் இந்த மனிதர்களின் கவனமெல்லாம் நம் மனித வளங்களின் மேல் இருப்பதும் நம் இந்தியாவின் வளர்ச்சி பெருமையடைய வைப்பதாய் இருக்குமென்பதும் உண்மைதான்.ஆனால் அந்த சந்தோஷங்களெல்லாம் நமது முதலைகள் செழிப்பதற்கே அன்றி அடிமனிதனை அவை அடைய இருக்கிற வழிகள் எல்லாம் மூடப்பட்டிருக்கின்றன என்பதே உண்மை மதுமிதா.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) சொன்னது…

Warren Buffet பத்தி நெறைய கேள்விபட்டு இருக்கேன். இது கேள்விப்படாத இன்னொரு பக்கம். நீங்க சொன்னமாதிரி சம்பாதிக்கறவங்க நெறைய பேரு இருக்கலாம், ஆனா குடுக்கற மனசு எல்லாருக்கும் இல்ல நான் உட்பட. நல்ல பதிவு மதுமிதா

ஹேமா சொன்னது…

நல்ல செய்திகள் மது.
அறியத்தந்தீர்கள்.நன்றி.

Madumitha சொன்னது…

எதாவது ஒரு கதவு
திறக்கும் சுந்தர்ஜி.
நன்றிகள் பல தங்கமணி.
உங்களுக்கும் என் நன்றி ஹேமா.