skip to main |
skip to sidebar
மின் மினிகள்
அறை
நிரம்பி
வழிகிறது
பரிசு
பொருட்களால்.
ஐந்து
புகைப்பட சட்டங்கள்.
நான்கு
சுவர்க்கடிகாரங்கள்.
மூன்று
தேநீர்க்கோப்பை
தொகுதிகள்.
இரண்டு
இரவு விளக்குகள்.
ஒரு
குடிநீர் வடிகட்டி.
இன்ன பிற
பொருட்குவியலின்
நடுவே
காணக்
கிடைக்கவில்லை
குழந்தையின்
புன்னகையையொத்த
ஒரு புத்தகம்.
9 கருத்துகள்:
கொடுமையான கணங்கள்தான்...
கவிதை மிகவும் அழகா இருக்கிறது...
வாழ்த்துக்கள்...தொடருங்கள்...
நன்றி கமலேஷ்.
பரிசுப் பொருளாய் புத்தகம் கொடுப்பதை நாசூக்காகச் சொல்லியிருக்கிறீர்கள்.
அழகுதான்.
பரிசளிப்பது ஒரு கலை தான்
நன்றிகள் பல .
தலைப்பும் கவிதையும் நல்ல பொருத்தம்.
அறை நிரம்பிவழியும் பரிசுகள்
ஐந்திலிருந்து, ஒன்றகிப் பின் பலவாயினும்,
குழந்தை புன்னகையொத்த ஒரு புத்தகம்
இல்லையெனில்,
எதையும் வெற்றிடமாக்கி விடுகிறது
ஏங்கும் மனம்.
புத்தகம் ஒரு மிக சிறந்த பரிசு
உங்கள் கவிதை அதை சிறப்பாக வெளிபடுத்தியிருக்கிறது
வாழ்த்துக்கள்
r.v.saravanan
kudanthaiyur.blogspot.com
அருமையான கவிதை.. நம் மக்கள் புத்தகம் படிப்பதை இன்னும் யோசிக்கவே இல்ல.. எங்களூரில் அதிக பட்ச புத்தக படிப்பாளிகளின் படிப்பு குமுதமும் ஆனந்த விகடனும் மட்டுமே..
தொடர வாழ்த்துக்கள்
www.narumugai.com
கருத்துரையிடுக