புதன், 19 மே, 2010

மின் மினிகள்


அறை
நிரம்பி
வழிகிறது
பரிசு
பொருட்களால்.
ஐந்து
புகைப்பட சட்டங்கள்.
நான்கு
சுவர்க்கடிகாரங்கள்.
மூன்று
தேநீர்க்கோப்பை
தொகுதிகள்.
இரண்டு
இரவு விளக்குகள்.
ஒரு
குடிநீர் வடிகட்டி.
இன்ன பிற
பொருட்குவியலின்
நடுவே
காணக்
கிடைக்கவில்லை
குழந்தையின்
புன்னகையையொத்த
ஒரு புத்தகம்.

9 கருத்துகள்:

கமலேஷ் சொன்னது…

கொடுமையான கணங்கள்தான்...
கவிதை மிகவும் அழகா இருக்கிறது...
வாழ்த்துக்கள்...தொடருங்கள்...

Madumitha சொன்னது…

நன்றி கமலேஷ்.

ஹேமா சொன்னது…

பரிசுப் பொருளாய் புத்தகம் கொடுப்பதை நாசூக்காகச் சொல்லியிருக்கிறீர்கள்.
அழகுதான்.

பத்மா சொன்னது…

பரிசளிப்பது ஒரு கலை தான்

Madumitha சொன்னது…

நன்றிகள் பல .

சுந்தர்ஜி சொன்னது…

தலைப்பும் கவிதையும் நல்ல பொருத்தம்.

vasan சொன்னது…

அறை நிர‌ம்பிவ‌ழியும் ப‌ரிசுக‌ள்
ஐந்திலிருந்து, ஒன்ற‌கிப் பின் ப‌ல‌வாயினும்,
குழந்தை புன்ன‌கையொத்த ஒரு புத்த‌க‌ம்
இல்லையெனில்,
எதையும் வெற்றிட‌மாக்கி விடுகிறது
ஏங்கும் ம‌ன‌ம்.

r.v.saravanan சொன்னது…

புத்தகம் ஒரு மிக சிறந்த பரிசு
உங்கள் கவிதை அதை சிறப்பாக வெளிபடுத்தியிருக்கிறது
வாழ்த்துக்கள்

r.v.saravanan
kudanthaiyur.blogspot.com

மதன்செந்தில் சொன்னது…

அருமையான கவிதை.. நம் மக்கள் புத்தகம் படிப்பதை இன்னும் யோசிக்கவே இல்ல.. எங்களூரில் அதிக பட்ச புத்தக படிப்பாளிகளின் படிப்பு குமுதமும் ஆனந்த விகடனும் மட்டுமே..
தொடர வாழ்த்துக்கள்

www.narumugai.com